கிழக்கு மாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரை சந்தித்தார்

0
67

கிழக்கு மாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்
ஜோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்தார்.
கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய, மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரட்ன ஓய்வு பெற்று சென்ற நிலையில், கிழக்கு மாகாணத்திற்கு. புதிய இராணுவ கட்டளை
தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து
ஆசி பெற்றுக்கொண்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயரதிகாரிகளுடனும் சம்பிரதாயபூர்வமான கலந்துரையாடல்களிலும், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி ஈடுபட்டார்.