குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் வனப்பகுதியில் இருந்து மீட்பு!

0
76
தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல்போன குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார். தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.குளியாப்பிட்டிய சொருகம பிரதேசத்தில் உணவு விற்பனை நிலையத்தை நடத்தி வந்த 31 வயதுடைய சுசித் ஜயவன்ச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள தியவன்னா ஓயாவில் அடையாம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.