கொழும்பு, டாம் வீதியில் உண்டியல் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் 8.2 மில்லியன் ரூபா சம்பாதித்த இருவர் கைது!  

0
97

கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்),  டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும், மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.