கொழும்பில் இந்திய சமையற்கலை நிபுணர் கொலை

0
127

கொழும்பு கோட்டை, காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் இந்தியாவை சேர்ந்த முகாமையாளர் ஒருவர் இந்திய பிரஜையான தலைமை சமையற்கலை நிபுணரை கொலை செய்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, முகாமையாளர் கத்தியால் குத்தியதில் சமையற்கலை நிபுணர் உயிரிழந்தார்.

அஜய் குமார் என்ற 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உணவகத்தில் சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.