கொழும்பில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; தாயும் மகனும் காயம்!

0
20

கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. 

காரின் சாரதி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மகன் பாடசாலை மாணவன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி உட்பட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.