இந்தோனேசியாவில் உள்ள மனஹான் மைதானத்தில் நடந்த 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ஜேர்மனி சம்பியனானது. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையே நடந்த இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தால் பெனால்டியில் 4- 3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி முதன்முதலாக 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சம்பியனாகியது.
1985 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய ஜேர்மனி தோல்வியடைந்திருப்பினும் 2023 ஐரோப்பிய சம்பியனான ஜேர்மனி பீபா சம்பியன் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
2001 ஆம் ஆண்டு சம்பியனான பிரான்ஸ் 2023 இல் ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது