சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாரா!

0
193

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரி இருக்கிறது. தற்போதும் அந்தவிடயத்தில் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுடனும் அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது என்று அவர் கூறினார்.