27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனாவில் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து – 8 பேர் பலி!

கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததுடன்இ 17 பேர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. WUXI நகரில் உள்ள WUXI YIXING தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சீன நேரப்படி நேற்று மாலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மோசமான பரீட்சை முடிவுகள் காரணமாக டிப்ளோமா பெறத் தவறியமையினாலும் தமது பயிற்சிநிலை தொழிலில் கிடைக்கும் வேதனத்தால் திருப்தியடையாது போனமையினாலும் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை சீனாவின் தெற்கு நகரமான ஜுஹாயில் மைதானமொன்றில் கூடியிருந்த சிலர் மீது நபரொருவர் மகிழுந்தைச் செலுத்தியதில் சுமார் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles