சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும், பெயர்ப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

0
73

இலங்கை இராணுவத்தின் 75 வது வருட பூர்த்தியினையும், சர்வதேச சுற்றுலா தினத்தையும் முன்னிட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், கல்லடி பகுதியில் சுற்றூலா பயணிகளுக்கான வழிகாட்டி பெயர் பலகை இன்று திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.


அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 243 படைப்பிரிவின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இப் பயண வழிகாட்டி பெயர்ப்பலகையை,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனினால் திரைநீக்கம் செய்தார்.


நிகழ்வில் 243 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, கேணல் தம்மிக்க, அம்கோர் நிறுவன பணிப்பாளர் ப.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தன் ,அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுத்தின் மட்டக்களப்பு மாவட்ட 243 படைப்பிரிவினர், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் மட்டக்களப்பு நகரினை அழகுபடுத்துவதற்கும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.