அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானால், பாரிய ஆபத்து ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், கமலா ஹாரீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிக்காக்கோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மூன்று நாள் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றும் போதே
கமலா ஹாரீஸ் இவ் எச்சரிக்கையை விடுத்தார்.
‘இந்தத் தேர்தலுடன் நமது தேசம் கடந்த கால கசப்பு, இழிவு நிலை மற்றும் பிளவுபடுத்தும் போர்களை கடந்து செல்ல ஒரு விலைமதிப்பற்ற, விரைவான வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கர்களாக நாம் அனைவரும் இணைந்து முன்னோக்கி செல்வோம். ஆனால் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரச்னைகள் ஏற்படும். அவர் ஒரு தீவிரமான மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில்
அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமானவை’ என்றார்.
கமலா ஹாரிஸூன் உரை தொடர்பில், டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், ‘கமலா ஹாரிஸ் என்னைப் பற்றியா பேசுகிறார்?. அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறார். அதிகமாக நன்றி தெரிவித்துள்ளார். அவர் துணை அதிபராக பணியாற்றும் போது அவர் முன்வைத்த கொள்கை முன்மொழிவுகளை ஏன் நிறைவேற்றவில்லை. அவருக்கு மூன்றரை வருடங்கள் இருந்தன. ஆனால் தீங்கு தவிர வேறு எதையும் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.