‘ஜனநாயகத்தின் பங்குதாரர்களுக்கான ஓர் இடம்’- மட்டக்களப்பில் கலந்துரையாடல்

0
126

‘கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் இடம்’
என்ற தொனிப் பொருளில் ஏ.எச்.ஆர்.சி.எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று  மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புக்கள்,உள்ளூராட்சி சபை உத்தியோகஸ்த்தர் ஆகிய 3 பங்குதாரர்களையும் ஒன்றினைத்து, உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மைத் தன்மை,வெளிப்பாட்டு தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்கின்ற அடிப்படையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் மக்கள் சேவை தொடர்பான பணிகள் என்பன தொடர்பாகவும் பிரதேசத்தில் நாளாந்தம் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
பிரதேசசபை தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகளை பிரதேச சபையின் அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.ஏனைய விடயங்களுக்கு தீர்வு பெற குறித்த திணைக்களங்களை நாடுதல் என கலந்துரையாடப்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை ஆராயும்  கலந்iதுரையாடலை ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை 3 ஜனநாயக பங்கு தாரர்களை நடாத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
நிகழ்வில் வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் இசைதீன் கலந்துகொண்டார்.அத்துடன்
சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் அ.ஹாரூன்,கோறளைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தன், ஏ.எச்.ஆர்.சி நிறுவனம் சார்ந்த பிரதி இணைப்பாளர் அ.மதன் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.