ஜனாதிபதி யாராக இருந்தாலும் அவரது வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பேன்-குமார வெல்கம

0
159

எதிர்க்கட்சியில் எவருக்கு எதிராக இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்க உழைத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த அவர், அதற்காக ஜனாதிபதி மிகவும் கடினமாக உழைத்ததாகவும் தெரிவித்தார்.வருங்கால சந்ததியினருக்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.
சர்வதேச நிதியுதவியை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ள நிலையில், அதனை பெற்றுக் கொண்டமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, யாராக இருந்தாலும் தாம் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.