28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழரின் ஆதி மரபுப்படி திருமணம்!

தமிழர்களின் ஆதி மரபுப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை ஓர் இணை திருமண பந்தத்தில் இணைந்தது.

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று – திக்கோடை பகுதியிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

நெல் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மண மகனும் மணமகளும் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன் நிகழ்வுகள் பாரம்பரியங்களை பின்பற்றியதாக நடைபெற்றது.

தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த திருமணத்தை நடத்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles