கிராம மட்டத்தில் தலைமைத்துவமிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள்
மன்றமும் இணைந்து ஆரம்பித்துள்ள இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமொன்றை நடாத்துகின்றன.
நேற்று மாலை மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலத்தில பயிற்சி முகாம்
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் க.விந்தியன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட
பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கலாராணி பிரதம
அதிதியாக கலந்துகொண்டார்.