திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட 9 பேர் கைது!

0
156

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும், இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை, இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகாமை கைது செய்துள்ளது.
சி.குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து, போதைப்பொருள் கும்பல் ஒன்றை நடத்தி வந்ததாக, இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கான போதைப்பொருளை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பி வந்துள்ளார்.
இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும், இரு நாடுகளிலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும், இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகாமை தெரிவித்துள்ளது.
நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி.குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுஷ்க ரோஷான், வெள்ளே சுரங்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், முகமது அஸ்மின் மட்டும், இராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்பதுடன், மற்றவர்கள் அனைவரும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.