சுற்றுலா இந்திய (INDIA) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (SOUTH AFRICA) இடையில் நேற்று (13) நடைபெற்ற மூன்றாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இதன்படி போட்டித்தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.
தென்னாபிரிக்க செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். திலக் வர்மா 56 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.