தேசிய மக்கள் சக்தி: விவாதத்திற்கு அஞ்சுவதாக, நிரோஷன் பெரேரா தெரிவிப்பு!

0
58

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு விவாதத்தை தேசிய மக்கள் ச்கதியினர் நிராகரிப்பார்களாயின் அவர்கள் அஞ்சுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் விவாதத்திற்கு தயாராகவே உள்ளோம். இருப்பினும் நாம் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவுடன் விவாதத்தை நடத்துவதற்கே அழைப்பு விடுத்தோம். இருப்பினும் அவர்கள் முன்வர தயாராகவில்லை. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு விவாதத்திற்கு அஞ்சவில்லையாயின் அவர்கள் எம்முடன் விவாதத்திற்கு வர முடியும்.
அதேபோன்று அவர்களிடம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வல்ல கொள்கை இருந்தால் அதனை அவர்களால் முன்வைக்க முடியும்.எதற்காக தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைமைகள் மற்றும் பொருளாதார குழுக்களுடனான விவாதத்தை நிச்சயம் நடத்த வேண்டும். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லையாயின் தேசிய மக்கள் சக்தியினர் அச்சத்தில் விலகி செல்கின்றனர் என்றே கூற முடியும்.