கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் காணப்படும் கொவிட் தடுப்பூசி தொடர்பான தரவுகளுக்கு அமைய, எமது நாட்டில் மூன்றாவது தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை பெற்றுக்கொள்வதற்காக பல தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய விரைந்து செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர் சந்தன கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.