நெருக்கடியான காலத்தில் இந்தியா உதவி கப்பலை அனுப்ப, சீனா உளவுக் கப்பலையே அனுப்பியது

0
181

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இந்த காலகட்டத்திலே எங்களுக்கு உதவிய நாடு, அயல் நாடு இந்தியா மாத்திரமே.
இந்தியா உதவிக் கப்பல்களை அனுப்பியது. ஆனால் சீனா உளவுக் கப்பலை அனுப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இடைக்கால வரவு செலவு திட்ட 3ஆம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்காத தேரர் ஒருவர், சீனாவில் இருந்து உளவுக் கப்பல் வரும் போது அதற்குரிய மரியாதையை கொடுத்து எழுந்து நின்றதாகவும் சபையில் தெரிவித்தார்.