பகல் நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடும் முன்னாள் அரச ஊழியர் ஒருவரை குளியாப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குளியாப்பிட்டிய எலத்தலாவ பகுதியைச் சேர்ந்த இவர், தங்க நகைகள், 4 விலை உயர்ந்த மடிக்கணினிகள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளைத் திருடி அவற்றை விற்பனை செய்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாகந்துர வைத்தியசாலையில் ஊழியராக பணிபுரிந்த வேளையில், சந்தேகநபர் இதற்கு முன்னர் திருட்டு குற்றத்துக்காக தண்டனை பெற்றுள்ளதுடன் தனது தொழிலையும் இழந்துள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் குளியாபிட்டிய உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.