பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானம்!

0
255

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழித்துஇ அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு எதிர்கட்சிகள்இ சட்டத்தரணிகள் சங்கம்இ சிவில் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.