கல்கிசை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பே, மடபாத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை, பிலியந்தலை மற்றும் மொரட்டுமுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள ஏராளமான திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள்,தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.