பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சி: மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவனிற்கு கௌரவிப்பு

0
332

எதிர்வரும் 4ம் திகதி இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் தூரமுடைய பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியில் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி மாணவனான தவேந்திரன் மதுசீகன் ஈடுபடவுள்ளார்.

சாதனை முயற்சியில் ஈடுபடவுள்ள தவேந்திரன் மதுசீகனை கௌரவிக்கும் நிகழ்வும், சாரணர் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்ட தவேந்திரன் மதுசீகன் மற்றும் சக சாரண மாணவனான அமலநாதன் கௌசிகன் ஆகியோருக்கு சின்னம் சூட்டும் வைபவம் கல்லூரி முதல்வர் ஜோன் பிரபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி விருதைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு, சாரண இயக்கத்தினரால் சின்னம் சூட்டப்பட்டதோடு, பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்ட தவேந்திரன் மதுசீகன், எதிர்வரும் 4ம் திகதி பாக்குநீரிணையைக் கடக்கும் சாதனை முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
இம் முயற்சிக்கு பாடசாலை சமூகத்தினர் தமது ஆசிகளை வழங்கியதோடு, பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

சாதனை முயற்சியில் ஈடுபடவுள்ள தவேந்திரன் மதுசீகனிடம் பாடசாலைக் கொடி மற்றும் சாரணர் இயக்க கொடி என்பனவும் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்பட்டது.
கல்லூரியின் பிரதி அதிபர், சாரண இயக்கத்தினர், கல்லூரி ஆசிரியர் குழாத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் இன்றைய நிகழ்வில் பங்கெடுத்தனர்