பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளிற்காக – அமெரிக்க குழு இலங்கை விஜயம்

0
307

இலங்கையுடன்  பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் 20 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.அமெரிக்க குழுவினர் நேற்றிரவு கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க குழுவினரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு விமானநிலையத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போயிங் சி-17 குளோப்மாஸ்டர் என்ற விமானத்தில் அமெரிக்க குழுவினர் இலங்கை வந்துள்ளனர். உயர்மட்ட பேச்சு வார்த்தைகளிற்காகவே இந்த விஜயம் இடம் பெறுவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.