பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்த வேன்!

0
10

யாழ்ப்பாணம் – பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. 

வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.