பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயல்வாதத்தை முன்னிட்டு பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இளம் சமூக செயற்பாட்டாளர்களினால்
ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு விழிப்பூட்டல் கலை நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இளம் சமூக.செயற்பாட்டாளர்களின் இணைத்தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அரங்கத்தின் தலைவி இணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பெண்களால் தீபங்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பெண்களை ஒன்றினைத்து,
பாலின சமத்துவத்தை மேம்படுத்தி. அனைவரும் அச்சம்,பாகுபாடு மற்றும் தீங்கின்றி வாழக்கூடியசூழலை உருவாக்குவதற்குரிய கலை அம்ச நிகழ்வுகள்
அரங்கேற்றப்பட்டன.
விழிப்புணர்வு நாடகம்,கவிதை,வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவற்றில் இருந்து பெண்களை விடுவித்தல்
போன்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தினார்கள்.
Home கிழக்கு செய்திகள் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயற்றிட்டம் அம்பாறையில் முன்னெடுக்கப்படுகிறது.