பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்

0
118

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக், இன்று ஏறாவூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவைச் சந்தித்தார்.


ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் தொடர்பில், பிரித்தானிய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஏறாவூர் நகர சபைச் செயலாளரினால், மக்கள் நலத் திட்டங்கள் அடங்கிய விசேட ஆவணமொன்றும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.