இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் பாட்பன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பாம்பனுக்கு அருகில் உள்ள அக்காள்மடம், வடக்கு பாக் ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டடிருந்தன.
இதன்போது 780 கிலோகிராம் பீட் இலைகள் மீட்கப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 5 லட்சத்து 46 ஆயிரம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல்களை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.