பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

0
153

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள், கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூக வலைத் தளங்கள் மற்றும் சி.சி.ரி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை, பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள், 071- 859 15 59, 071-808 55 85, 011- 239 13 58 அல்லது 1997 ஆகிய, தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன், தேடப்படும் சந்தேக நபர்களின் புகைப்படங்களையும், பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.