28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொருளாதாரத்தை சிறந்த முறையில் ஜனாதிபதி முகாமைத்துவம் செய்துள்ளார்சாந்தினி கோன்கஹகே தெரிவிப்பு

இந்த வருடம் புத்தாண்டை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹேவாஹெட்ட தொகுதி அமைப்பாளர் சாந்தினி கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புது வருட ஏற்பாடுகளில் மக்கள் மும்முரமாகி விட்டனர். வீதிகளில் மக்கள் பெருந்திரளாக காணப்படுகின்றனர். அதனைக் கண்டு மகிழ்ச்சியடைய முடிகிறது. 2022 மற்றும் 2023ஆம் வருடங்களோடு ஒப்பிடுகையில் மக்கள் இம்முறை சிறந்த வகையில் புத்தாண்டை கொண்டாட தயாராவது தெரிகிறது.

இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முடிந்துள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை போன்றே ரமழான் பெருநாளும் காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவது தொடர்பில் ஜனாதிபதி சிந்தித்துள்ளார். அவர்களுக்கு நிதி திரட்டி அனுப்பவும் முடிந்துள்ளது.

ஜனாதிபதி கடந்த வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்துள்ளார். அங்கு இளைஞர்கள் விவசாயிகள் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளார். அதேபோன்று அரச துறைக்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ள பட்டதாரிகள் அது தொடர்பில் அவருக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நாட்டின் தலைவருக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் உணர முடியும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில் நேற்றைய தினமும் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இளைஞர், யுதிகளுக்கு வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles