போட்டியின் வெற்றிக்கு குறியீட்டு தொடர்பாடல் முறைமை முக்கிய பங்கினை வகித்தது – க்றிஸ் சில்வர்வுட்!

0
151

பங்களாதேஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆசியக் கிண்ண தொடரின் போட்டியின் வெற்றிக்கு, குறியீட்டு தொடர்பாடல் முறைமை முக்கிய பங்கினை வகித்ததாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்றிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும் போது பங்களாதேஸ் பலமான எதிரி அணி இல்லை என்றும் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக தெரிவித்தாலும், இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்று பங்களாதேஸ் அணியின் தலைவர் சகிப் அல் அசன் தெரிவித்திருந்ததாலும், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.

அத்துடன் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குத் தெரிவாவதற்கான முக்கியப் போட்டியாகவும் இது அமைந்திருந்தது.

இந்தநிலையில் போட்டியின் வெற்றிக்கு குறியீட்டு தொடர்பாடல் முறைமை முக்கிய பங்கினை வழங்கியதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கூறியுள்ளார்.

மைதானத்தில் முக்கியமான தருணங்களில் தாம் இலங்கை அணித் தலைவருக்கு குறியீட்டுத் தொடர்பாடல் மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், இந்த முறைமைய பல்வேறு கிரிக்கட் அணிகள் தற்போது பின்பற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.