கொழும்பில் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கொடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 570 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 2 வாள்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக கூறப்படும் 72,500 ரூபா பணம் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.