போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றது.

0
126

‘நாங்கள் போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு காத்தான்குடியில் விழிப்புணர்வு செயலமர்வு
இன்று இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எ.டபிள்யு..இர்சாத் அலியின் வழிகாட்டலில்,
செயலமர்வு நடாத்தப்பட்டது.
வளவாளராக பிரதேச செயலக போதைப்பொருட் தடுப்பு உத்தியோகத்தர்களான பி.சந்திரகாந்தன், எஸ்.கோவிந்தராசா, பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் றஸ்மின்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் தலைவி எஸ்.சுஜீவா, முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்
என்.எம்.பாயிஸ் ஆகியோர் பங்கு கொண்டனர்.