இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக 28 வயதுடைய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.