ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் உள்ள நிலவரங்களை மூடி மறைத்து வேறு பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து கலவரத்தை உண்டு பண்ணும் நோக்குடன் செயற்படுவதாக
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஊடாக மட்;டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வின் போதே இவ்வாறு
குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிறுத்தியே கடந்து வந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆண்டு
வந்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆட்சியாளர்கள் வரும்போதும் ஒவ்வொரு இனவாதமும் மதவாதமும் இருந்திருக்கின்றது.
கடந்த காலங்களில் யுத்தத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தார்கள் இன்று மதவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிறுத்தி
அரசியல் செய்கின்றார்கள்.
ஆனால் எங்களது அரசாங்கம் ஒன்று வருமாக இருந்தால் நாங்கள் புரையோடிப் போய் கிடக்கின்ற தமிழர்களுக்காக புதியதொரு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அனைவருடைய ஒத்துழைப்புடன்
அந்த சட்டத்தை நிறைவேற்றுவோம்.
இன்று 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் 13-வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது அவர்கள்
கையொப்பமிடவில்லை அந்த நேரத்தில் அவர் பிரதமராக இருந்தார்.
தற்போது நாட்டில் ஒரு இனவாதத்தை தூண்டுவதற்காக இன்று 13வது திருத்த சட்டத்தை கையில் எடுத்து நரிக்குணத்தை ஆரம்பித்து இருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒருபோதும் செவி சாய்க்க கூடாது என கேட்டுக்கொள்கின்றேன்.