மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தமிழ் மொழித் தின விழா

0
144

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில், மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும்; நோக்கோடு தமிழ் மொழித் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ் மொழி தின நிகழ்வுகள், கல்லூரி முதல்வர் பகீரதன் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் மொழி தின விழா குழுவின் ஏற்பாட்டில், பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.