மட்டக்களப்பு இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலய ஆங்கில இலக்கிய கழகத்தின் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன

0
129

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆங்கில இலக்கிய கழகத்தினால் செயற்படுத்தப்பட்ட
முதலாவது மன்ற நிகழ்வு அதிபர் றூபஸ் பெர்ணாண்டோ தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் கம்சிக்கா பீற்றரின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் இடம்பெற்றநிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.குகதாசன் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்
இடைநிலைப் பிரிவு மாணவர்களால் ஆங்கில மொழியில் நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.
மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் மன்றம் அமைத்து இவ்வாறான ஆங்கில மொழியிலான நிகழ்வு நடாத்தப்பட்டமை
சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
ஆங்கிலத்தில் ஆக்கங்கள் , நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கு வருகை தந்த அதிதிகளால் சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன.