மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏறாவூர் நகர், ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு டெங்கு ஒழிப்பு இடம்பெற்றது. நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர் என பெருமளவான உயரதிகாரிகளும் பங்கெடுத்தனர்.
டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளங் காணப்பட்டு, சுத்தமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.