மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் ஆரையம்பதி பகுதியை நோக்கி பயணத்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 20வயதுடைய யுவதியின் மோட்டார் சைக்களுடன் பின்னால் பயணித்த கொண்டிருந்த நாவற்குடா பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நபரின் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமுற்ற 20வயதுடைய யுவதி மற்றும் 54 வயதுடைய நபர் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை அவசரசிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சை பலனின்றி இன்று உயிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த யுவதி மரணம்