மட்டக்களப்பு கல்வி வலயத்தில், விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்குக் கௌரவிப்பு

0
55

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து, மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி, சாதனை படைத்த
பாடசாலைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நிகழ்வு
நடைபெற்றது.

பிரதம அதிதியாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் க.மகேசன் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் யு.சிவராஜா பங்கேற்றார்.

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் பாண்ட் வாத்திய இசையுடன்
அழைத்து வரப்பட்டு, கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.