மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

0
140

மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1988ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பு மற்றும் 1991 கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பு பழைய
மாணவர்களினால் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது
பழைய மாணவர் குழுவின் தலைவர் டொக்டர் எஸ்.டி.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களுக்கு கற்பித்த முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள்
கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி அடைவு மட்டங்களை பெற்ற பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்