மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில், ஈஸ்டர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
86

2019ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்றைய தினம் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. சீயோன் தேவாலயத்தில் இன்று காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.


குண்டுவெடித்த சீயோன் தேவாலயத்திற்கு வந்த உறவுகள் கண்ணீர்மல்க அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் குடும்பமாக சந்தோசமாக மகிழ்ச்சியாகயிருந்ததாகவும் இன்று அவை இல்லாமல்போயிவிட்டதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டனர். குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2019 ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில்; இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.