மட்டக்களப்பு பெரியபோரதீவில் மாணவரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

0
67

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியைச்சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்றுக் காணாமல்போன நிலையில் இன்று
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெரியபோரதீவிலிருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே காணமால் போயிருந்த நிலையில்,
இன்று பட்டிருப்பு பாலத்திற்கு கீழிலிருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் பெரியபோரதீவு,பட்டாபுரத்தினை சேர்ந்த 17 வயதுடைய லோகநாதன் கிதுசனாவர்.
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தினை பார்வையிட்டதுடன்
பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.