மட்டக்களப்பு பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஒன்றிக்கான புதுமுக மாணவர்களுக்கான வரவேற்ப்பு விழா
பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிரேஸ்ட மாணவர்கள் மலர்மாலைகளை புதிய மாணவர்களுக்கு அணிவித்து வகுப்புக்களுக்கு அழைத்துச் சென்றனர்.
அதிதிகளினால் மங்களவிளக்கேற்றப்பட்டு, வரவேற்புரையானது மும்மொழிகளிலும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் பேத்தாழை விபுலானந்த கல்லூரி அதிபர் சி.முருகவேல், கல்குடா பொலிஸ் நிலையப் பதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் க.விநோத், இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தனின் தாயார் கமலா சிவநேசதுரை மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் பாடசாலைக்கு ஆற்றி வரும் சேவைகளை நினைவுகூர்ந்து, பாடசாலை நிர்வாகம் தமது
நன்றியை தெரிவித்தது.