மட்டக்களப்பு மாவடிவேம்பு உளநல புணர்வாழ்வு நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
இடம்பெற்றது. மட்டக்களப்பு உளநல அபிவிருத்தி நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்ட உளநல மேம்பாட்டுக்கான
செயல்திட்டத்தில் ஒன்றாக இந்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பி.கஜரூபனின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொணிப்பொருளில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
உளநல புணர் வாழ்வு நிலைய பொறுப்பு அதிகாரி வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில், அம் கோர் நிறுவன நிதி உதவியுடன் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானங்கள் துறை தலைவர் உ. விக்னேஸ்வரன், கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானங்கள் துறை சிரெஸ்ட விரிவுரையாளர் ஏ.கன்னிய ராஜ்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கீர்த்திகா மதனழகன்,
உளநல புணர்வாழ்வு நிலைய பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் கோகிலா இந்திரன், உட்பட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள்,
கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர்கள், உளநல புணர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
உளநல புணர்வாழ்வு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் குருதியை வழங்கிய மாணவர்களுக்கு பயன் தரும் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.