மட்டக்களப்பு மாவட்ட புலம்பெயர்வாளர் அமைப்பின் பங்குதாரர்களுக்கான கலந்துரையாடலானது, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.எஸ்.எஸ்.பி.பிரசன்னாவின்
பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில், புலம்பெயர் தொழிலாளர்களை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் புலம் பெயர் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மனித கடத்தல், மனித வியாபாரம், சட்டவிரோத புலம்பெயர்தல், கடல்வழியாக ஆட்கடத்தல், போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் தெடாடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன. மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்
கே.நிகரில்காந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம்.மலிக், உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.