மட்டக்களப்பு வாகரையில் மின்னல் தாக்கி, கால்நடைகள் உயிரிழந்துள்ளன

0
71

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மின்னல் தாக்கி நான்கு கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வாகரை பிரதேசத்தில் நேற்று இரவு இடியுடன் பெய்த மழை பெய்த நிலையில், கருவப்போடி பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள், மின்னல்
தாக்கத்திற்குள்ளாகியுள்ளன.


மின்னல் தாக்கியதில் நான்கு மாடுகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர் மூவருக்குச் சொந்தமான மாடுகளே உயிரி;ழந்துள்ளன.
கால்நடைகள் இறந்தமை தொடர்பில் வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்