மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதியோருக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் தவராஜாவின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் முதியோருக்கான நடமாடும் மருத்துவ முகாமும் கண்சிகிச்சையும் கெல்ப்பேஜ் நிறுவனத்தின் அனுசரணையில் இடம் பெற்றது.
மருத்துவ முகாமில் ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தாரிக் கெல்ப்பேஜ் நிறுவனத்தின் வைத்திய குலாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ,பார்வை குறைபாடுடையவர்களுக்கு மூக்குக்கண்ணாடி
வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச செயலக சமுக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன் தெரிவித்தார்.