மட்டு.வவுணதீவு பிரதேசத்தில்
வீட்டிற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு

0
194

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சமுர்த்தி சௌபாக்கியா விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பயனாளி ஒருவருக்கு வீட்டுக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

6இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அரச நிதியுடன் பயனாளியின் பங்களிப்புடன் இவ்வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.

நிகழ்வில் மண்முனை மேற்கு,வவுணதீவு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் கே.தங்கத்துரை,வங்கி வலய முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.