மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான அடியுரம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வாழைச்சேனை கமநல கேந்திர நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ஜெயகாந்தன் தலைமையில் நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட கமநல பிரதிபணிப்பாளர் மு.ஜெகன்நாத் விவசாயிகளுக்கு உர நிவாரணத்தை வழங்கி வைத்தார்.
கடந்த வருடம் பெரும் போக செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கே குறித்த உரம் வழங்கி வைக்ப்பட்டது.
ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அடிப்படையில் முதல் கட்ட நிகழ்வாக 45 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டது.